Monday, November 4, 2013

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

புதுடெல்லி, நவ. 4–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பேசிய கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினார்கள்.

குண்டுவெடிப்பை நடத்திய இந்தியன் முஜாக்தின் தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.

மோடி பிரசாரம் செய்ய உள்ள மற்ற கூட்டங்களில் கைவரிசை காட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நரேந்திரமோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் கொண்டு கருப்புபூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமாண்டோக்கள் 3 அடுக்காக அரண் போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். மோடி எங்கு சென்றாலும் இந்த கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.

மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் கமாண்டோ வீரர்களின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் இருக்கும் கமாண்டோக்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள். மூன்றாவது அரணாக இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

...

shared via

Popular Posts