Sunday, October 27, 2013

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஜெய்ப்பூர், அக். 27–

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதக்கலவரம் நடந்த உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ) சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுமாறு துண்டியதாக ராகுல்காந்தி பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும் அவர் பேசிய பேச்சின் சி.டி. பதிவு காட்சிகளை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.யுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருந்த தகவலை ராகுல்காந்திக்கு ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் தெரிவித்தார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:–

முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். அவருக்கு இந்த தகவலை கொடுத்தது ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் யார் என்று எனக்கு தெரியும். சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இந்த தகவலை வைத்துதான் அவர் தனது பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த பேச்சு மூலம் கட்சிக்கு பலன் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். குடும்ப சீரியலில் நன்றாக பேசுவதாக இளவரசர் கருதுகிறார். தன்னை மதசார்பற்றவர் என கூறுகிறார். ஆனால் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுகிறார்.

அரசியல் லாபத்துக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.

பா.ஜனதா உள்பட எதிர்கட்சியினர் மீது பல வழக்குகள் போடுவதற்காகவே சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts