Tuesday, October 29, 2013

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

அகமதாபாத், அக். 29-

பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில்  கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக அவர் சாடினார். அவர் பேசியதாவது:-

நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.

தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts