Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Monday, November 4, 2013

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

புதுடெல்லி, நவ. 4–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பேசிய கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினார்கள்.

குண்டுவெடிப்பை நடத்திய இந்தியன் முஜாக்தின் தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.

மோடி பிரசாரம் செய்ய உள்ள மற்ற கூட்டங்களில் கைவரிசை காட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நரேந்திரமோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் கொண்டு கருப்புபூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமாண்டோக்கள் 3 அடுக்காக அரண் போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். மோடி எங்கு சென்றாலும் இந்த கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.

மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் கமாண்டோ வீரர்களின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் இருக்கும் கமாண்டோக்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள். மூன்றாவது அரணாக இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

...

shared via

Saturday, November 2, 2013

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

அகமதாபாத், நவ. 2-

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Friday, November 1, 2013

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

புதுடெல்லி, நவ. 1–

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.

டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

...

shared via

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

புதுடெல்லி, நவ. 1–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.

...

shared via

Wednesday, October 30, 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

பாட்னா, அக்.31-

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Tuesday, October 29, 2013

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

அகமதாபாத், அக்.30-

பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கி தரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலை தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.

அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில் தான் குறியாக இருந்தார் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.

...

shared via

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

அகமதாபாத், அக். 29-

பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில்  கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக அவர் சாடினார். அவர் பேசியதாவது:-

நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.

தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

Bangalore: Narendra Modi to address rally on November 17

In light of the serial blasts in Patna during a Modi rally in Bihar, the BJP has asked the state government of Karnataka to provide adequate security for the event to avoid any unfavourable circumstances on November 17.

Party spokesperson Prakash Javadekar says, "We hope that the state government takes necessary precaution." He further added,"We cannot forget the bomb blasts near BJP state office (in Bangalore) in April. Some members of the Coimbatore module were arrested in Puttur who planted these bombs as well as carried out targeted killings of five BJP leaders in Tamil Nadu and attacked L K Advani's rally in Coimbatore." He also confirmed that BJP would collect Rs 10 from party workers as an entry fee for the rally.

However, Javadekar did not give any direct answers o questions relating taking back B S Yeddyurappa into the party fold. He said, "I think you have to wait for few more days. Let's see."

OneIndia News

Patel should have been first PM, says Modi as he shares stage with Manmohan

On a momentous occasion, Prime Minister Manmohan Singh and BJP PM candidate Narendra Modi shared the stage at Ahmedabad on Tuesday evening at a function marking the inauguration of a museum dedicated to Sardar Vallabbhai Patel.

Gujarat Chief Minister Narendra Modi said that Sardar Patel had the credentials to lead India post Independence and that he, rather than Jawaharlal Nehru, should have become the country's first Prime Minister.

Speaking at length on Patel's ideology and policies, he said India would have had a very different fate if he had become the first PM.

Prime Minister Manmohan Singh, who took to the stage after Modi, emphatically stated that the first Home Minister of India and Nehru had a relationship based on respect and trust. He quoted the iconic leader from Gujarat, saying Patel himself had said it was his good fortune to have advised Nehru on matters of administration and this would not have been possible if there was no trust between the two men.

Emphasising that Sardar Patel was in pricinple a secular man, he said at this juncture, it was paramount for every leader and social worker to remind themselves the high ideals of secularism, tolerance and compassion for every citizen on which the modern nation of India was founded.

Modi and Manmohan appeared briefly together, exchanging words and laughs, as the two posed side by side for photographers.

Monday, October 28, 2013

'Modi alone can prevent terrorism'

CHENNAI,
Bharatiya Janata Party (BJP) State president Pon. Radhakrishnan on Monday said Gujarat Chief Minister and party's Prime Ministerial candidate Narendra Modi was alone capable of tackling terrorism effectively.

Condemning the Patna serial blasts that left five persons dead and many others injured, Mr. Radhakrishnan said the explosions were triggered at a time when the people of India were eagerly looking forward for Mr. Modi's speech at the 'Hunkar' rally.

"Only Mr. Modi as Prime Minister can take firm action and prevent such attacks. It is the responsibility of the voters to ensure that no candidate of the Congress is elected from Tamil Nadu.," he said after leading a demonstration to condemn the blasts.

The BJP would take out a 'padayatra' in December to thank the people across the State for their support to Mr. Modi. Many people from different walks of life were joining the party, he said.

Senior BJP leaders L. Ganesan, H. Raja were among those present. Earlier a one-minute silence was observed to pay homage to those who were killed in the Patna blasts.

Friday, October 25, 2013

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

லக்னோ, அக். 26-

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை  பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல் They killed my grandmother, father; will kill me too: Rahul

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்

They killed my grandmother, father; will kill me too: Rahul

இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை

shared via

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

அகமதாபாத், அக்.25- 

சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இயங்கிவரும் அமைப்பின் சார்பில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை விழா குழுவின் தலைவரும் மத்திய மந்திரியுமான தின்ஷா பட்டேல் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்து வரும் மோடி, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

புதுடெல்லி, அக். 25-

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

ராகுல் காந்தியன் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் ஏன் இந்த தகவலை தெரிவித்தார்கள்? என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ராகுல் ஒரு எம்.பி., நாங்களும் எம்.பி.க்கள் தான். அவர் ஒரு கட்சி நிர்வாகி, நாங்களும் கட்சி நிர்வாகிகள்தான். உளவுத்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அந்த தகவலை தெரிவிக்கவில்லை. அவரிடம் மட்டும் எப்படி கூறமுடியும்? அவர் பிரதமரோ, உள்துறை மந்திரியோ அல்ல. இதுபற்றி உள்துறை மந்திரி ஷிண்டே விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

...

shared via

Wednesday, October 23, 2013

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

புதுடெல்லி, அக். 23-

அரசியல் ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்து வரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கழிவறைகளை முதலில் கட்டி விட்டு ஆலயங்களை கட்டுவது பற்றி யோசிப்போம் என மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மோடிக்கு ஞானம் பிறப்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகளை கட்டியுள்ளது என்றும் பத்மாசூரன் போல் மோடி தன்னைத் தானே அழித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை என்ற அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்பு விழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்பு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

...

shared via

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

Gujarat Chief Minister and BJP's prime ministerial candidate Narendra Modi on Wednesday expressed confidence that the party will do well in Delhi Assembly polls under the leadership of Harsh Vardhan.

"Congratulations to Dr. Harsh Vardhan on being named BJP's CM candidate for upcoming Delhi elections. My best wishes," Mr. Modi said on twitter.

"As Health Minister, his (Harsh Vardhan's) trend-setting polio eradication drive made Delhi polio-free & now I am sure he will free Delhi from misgovernance," he further said.

He further wrote that "under the leadership of Dr. Harsh Vardhan and Shri Vijay Goyal, I am confident BJP will do great in the Delhi Vidhan Sabha Elections."

The decision to declare Dr Harsh Vardhan as BJP's chief ministerial candidate for the December 4 Delhi Assembly elections was taken by the party's parliamentary board on Wednesday.

Mr. Modi was not present in the meeting but had given his consent for the name of Dr. Vardhan.

...

shared via

Tuesday, October 22, 2013

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

புதுடெல்லி, அக்.22-

மோடிக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை ஆரம்ப காலத்தில் அத்வானியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்துருகன் சின்கா தற்போது மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மோடி எதிர்ப்பு மனப்போக்கை கைவிட்டு தற்போது பா.ஜ.க.வின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ள சத்ருகன் சின்கா, மோடியை பிரதமராக்குவது எனது கட்சி எனக்கு இட்டுள்ள கட்டளை அதை நான் எவ்வகையிலும் நிறைவேற்றியே தீருவேன்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி போனால் அவர் மீது கோபத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள்.

அதனால் அவரை பீகார் பிரசாரத்திற்கு அனுப்பக் கூடாது என்று முன்னர் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்கா, பீகாரில் நடைபெறும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததும், இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்தவர் நிதிஷ் குமார் என வானளாவ புகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.

...

shared via

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

புதுடெல்லி, அக்.23-

இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி பேசும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிடவுள்ள பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பவை தொடர்பான பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் டுவிட்டர் பக்கம் வாயிலாக தனி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள் சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி டுவீட் செய்துள்ளார்.

உங்கள் குரல் - உங்கள் தேர்தல் அறிக்கை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Monday, October 21, 2013

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

கன்னியாகுமரி, அக். 21–

கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முடிசூடும் பெருமாள், ரத்தினசாமி, கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா தலைவர் தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தகப்பிரிவு தலைவர் சுடலைமணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தோற்றுப் போய் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்ட முடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என்று அந்த துறை செயலாளரே கூறி உள்ளார். ஆனால் மத்திய அரசு அது தொடர்பான ஆவணங்களை களவு செய்து விட்டது.

அதே சமயம் பாரதீய ஜனதா ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையை மீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமது நட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்க நாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர் அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியது போல் இந்தியாவை உலக வல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்க நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Friday, October 18, 2013

India is not just Delhi: Modi

India is not just Delhi: Modi

The country's foreign policy has to be driven by people, not by politicians sitting in New Delhi, Gujarat Chief Minister and the Bharatiya Janata Party's prime ministerial candidate, Narendra Modi, said on Friday.

Asserting that "India is not just New Delhi," Mr. Modi wondered why bilateral or international conferences and summits should not be held in States. Giving a hypothetical example, he said that if and when the Prime Minister of Britain visited India next, all his official meetings need not be held in New Delhi. Instead, Chennai should be allowed to host the visit.

This would provide to the bureaucracy of Tamil Nadu much-needed exposure and there would be capacity building in the State.

Delivering the Nani Palkhivala memorial lecture at a function organised here by the Palkhivala Foundation, Mr Modi said cultural and economic advantages of States had to be leveraged in building the country's position among the comity of nations.

Pointing out that his State had entered into partnership with Japan and Canada, he mooted a new role for States in external affairs and suggested that each State be allowed to have partnership with one country.

His lecture created high expectations, but the event turned out to be a modest affair.

The University Centenary Auditorium, which was the venue of the lecture, had several empty seats, possibly because many invitees could not make it to the venue, thinking that they had to go through tight security arrangements.

...

shared via

Popular Posts