Tuesday, October 22, 2013

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

புதுடெல்லி, அக்.23-

இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி பேசும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிடவுள்ள பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பவை தொடர்பான பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் டுவிட்டர் பக்கம் வாயிலாக தனி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள் சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி டுவீட் செய்துள்ளார்.

உங்கள் குரல் - உங்கள் தேர்தல் அறிக்கை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts