Friday, October 25, 2013

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

புதுடெல்லி, அக். 25-

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

ராகுல் காந்தியன் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் ஏன் இந்த தகவலை தெரிவித்தார்கள்? என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ராகுல் ஒரு எம்.பி., நாங்களும் எம்.பி.க்கள் தான். அவர் ஒரு கட்சி நிர்வாகி, நாங்களும் கட்சி நிர்வாகிகள்தான். உளவுத்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அந்த தகவலை தெரிவிக்கவில்லை. அவரிடம் மட்டும் எப்படி கூறமுடியும்? அவர் பிரதமரோ, உள்துறை மந்திரியோ அல்ல. இதுபற்றி உள்துறை மந்திரி ஷிண்டே விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts