Saturday, October 26, 2013

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

உதய்பூர், அக். 26-

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts