Thursday, September 26, 2013

நரேந்திர மோடி திருச்சி வருகை , போலீசார் தீவிர சோதனை narendra modi tiruchi visit tanjore police checking

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருச்சியில் இன்று நடைபெற இருக்கும் இளந்தாமரை மாநாட்டிற்கு வருகை தர உள்ளார். இதற்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தமிழக உளவுத்துறை போலீசாரும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக உள்ளனர். நரேந்திர மோடி திருச்சி வருகையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சையில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். திருச்சிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே போல், தஞ்சையில் இருந்து கரூர், திருப்பூர், கோயமுத்தூர் செல்லும் பஸ்கள் அரியலூர் வழியாக செல்ல வேண்டும்.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் திருச்சிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மோடி திருச்சி வருகையை முன்னிட்டு தஞ்சையில் அதிரடி சோதனை நடைபெற்றது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை டவுன் பகுதியில் நேற்று இரவு 12 மணி முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மேற்கு, கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ராசேந்திரன் தலைமையிலும், தெற்கு, மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் போலீசார் தஞ்சை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோடியம்மன்கோவில், மேரீஸ்கார்னர், ராமநாதன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப், ஆற்றுப் பாலம், மேலவஸ்தாச்சாவடி, டான்டெக்ஸ் ரவுண்டானா, கீழவாசல் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தனியார் மற்றும் அரசு தங்கும் விடுதிகளில் சந்தேகம் படும்படி யாரும் தங்கி இருக்கிறார்களா என்று தீவிர சோதனையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதியில் சந்தேகம் படும்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் தங்கி இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Posts