Saturday, September 28, 2013

திருச்சியை அடுத்து இன்று டெல்லியில் மோடி பொதுக்கூட்டம்: 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என கணிப்பு 5 lakh people to attend in Modi Delhi rally

திருச்சியை அடுத்து இன்று டெல்லியில் மோடி பொதுக்கூட்டம்: 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என கணிப்பு 5 lakh people to attend in Modi Delhi rally

Tamil NewsYesterday,

புதுடெல்லி, செப்.29-

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களிடையே சுறுசுறுப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த 26ம் தேதி திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற மோடி, இன்று புதுடெல்லியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள ஜப்பானிய பூங்காவிற்கு நேரடியாக வந்திறங்கும் மோடியின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் பட்டியல் இன்றைய பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 நாடுகளை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரிகள் பலர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

பொதுக்கூட்ட மேடை அமைந்துள்ள பகுதியின் அருகாமையில் சுமார் 100 அடி உயரமுள்ள மோடியின் வானளாவிய கட் அவுட் கள் வைக்கப்பட்டுள்ளன. மேடையை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட ராட்சத திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வர முடியாதவர்கள் மோடியின் பேச்சை கண்டும் கேட்டும் ரசிக்க வசதியாக டெல்லியின் பிரதான பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ராட்சத டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என டெல்லி பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts