Sunday, September 29, 2013

மோடி வெற்றிபெற்று பிரதமராவது 100 சதவிகிதம் உறுதி Ramdev predicts win for Modi in 2014 polls

மோடி வெற்றிபெற்று பிரதமராவது 100 சதவிகிதம் உறுதி: சிகாகோ செய்தியாளர்களிடத்தில் ராம்தேவ் பேட்டி Ramdev predicts win for Modi in 2014 polls
Tamil NewsToday,

சிகாகோ, செப். 29-

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக யோகா குரு பாபா ராம் தேவ் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகாகோ, நியூஜெர்சி மற்றும் ஹவுஸ்டன் நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நேற்று சிகாகோ-இல்லியானஸ் நகரில் நடந்த விவேகானந்தர் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு ராம்தேவ் பேசினார்.  

பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் மோடி குறித்து கூறியதாவது:-

நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராவர் என்பது 100 சதவிதம் உறுதி. நாடு ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் 100 சீட்டுகளை மட்டும் பெறும். பாரதிய ஜனதா கூட்டணி 250-300 சீட்டுகளை பெறும். வரும் 2014-ம் ஆண்டுமுதல் இந்திய அரசியலில் புதிய வரலாறு படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதை நினைவு கூர்ந்தார்.

முன்பு பாபா ராம்தேவ் லண்டன் சென்றபோது அங்கு ஹூத்துரு விமானநிலையத்தில் சோதனை என்ற பெயரில் 8 மணி நேரம் வரை காக்க வைக்கப்பட்டார். இதுகுறித்து எந்த விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை. இது காங்கிரஸ் தலைமையிலான அரசின் சதித்திட்டம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts