Friday, October 4, 2013

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

Tamil NewsYesterday,

அகமதாபாத், அக்.4-

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 'டுவிட்டர்' வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார்.

5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு கொண்டாட்டம் ஆகும். இந்த தேர்தல் ஆரோக்கியமானதாகவும். ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்போம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த மாநிலங்களில் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:–

5 மாநில சட்டசபை தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற போதிலும், நரேந்திர மோடியின் செல்வாக்கு பாரதீய ஜனதாவின் வெற்றிவாய்ப்புக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் அந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ராஜஸ்தான், டெல்லியில் ஊழல் மலிந்து விட்டதால், அந்த மாநிலங்களில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றும். மிசோரம் மாநிலத்திலும் பாரதீய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் தற்போது பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுகிறது.

இவ்வாறு சுதான்சு திரிவேதி கூறினார்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts