
என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்
They killed my grandmother, father; will kill me too: Rahul
இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.
உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!
காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?
இப்படி நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன் பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!
இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000 [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!
அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,
உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.
உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும் தருவதில்லை, அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.
அண்ணாத்தையின் மரணபயத்தை
shared via