Friday, November 1, 2013

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

புதுடெல்லி, நவ. 1–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts