Wednesday, October 23, 2013

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

புதுடெல்லி, அக். 23-

அரசியல் ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்து வரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கழிவறைகளை முதலில் கட்டி விட்டு ஆலயங்களை கட்டுவது பற்றி யோசிப்போம் என மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மோடிக்கு ஞானம் பிறப்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகளை கட்டியுள்ளது என்றும் பத்மாசூரன் போல் மோடி தன்னைத் தானே அழித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை என்ற அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்பு விழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்பு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts