Friday, October 25, 2013

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

அகமதாபாத், அக்.25- 

சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இயங்கிவரும் அமைப்பின் சார்பில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை விழா குழுவின் தலைவரும் மத்திய மந்திரியுமான தின்ஷா பட்டேல் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்து வரும் மோடி, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts