Saturday, September 28, 2013

திருச்சியை அடுத்து இன்று டெல்லியில் மோடி பொதுக்கூட்டம்: 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என கணிப்பு 5 lakh people to attend in Modi Delhi rally

திருச்சியை அடுத்து இன்று டெல்லியில் மோடி பொதுக்கூட்டம்: 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என கணிப்பு 5 lakh people to attend in Modi Delhi rally

Tamil NewsYesterday,

புதுடெல்லி, செப்.29-

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களிடையே சுறுசுறுப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த 26ம் தேதி திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற மோடி, இன்று புதுடெல்லியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள ஜப்பானிய பூங்காவிற்கு நேரடியாக வந்திறங்கும் மோடியின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் பட்டியல் இன்றைய பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 நாடுகளை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரிகள் பலர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

பொதுக்கூட்ட மேடை அமைந்துள்ள பகுதியின் அருகாமையில் சுமார் 100 அடி உயரமுள்ள மோடியின் வானளாவிய கட் அவுட் கள் வைக்கப்பட்டுள்ளன. மேடையை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட ராட்சத திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வர முடியாதவர்கள் மோடியின் பேச்சை கண்டும் கேட்டும் ரசிக்க வசதியாக டெல்லியின் பிரதான பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ராட்சத டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என டெல்லி பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

Thursday, September 26, 2013

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம் fishermen issue central govt Narendra Modi

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி தாக்கு fishermen issue central govt Narendra Modi

 

திருச்சியில் பாரதீய ஜனதா இளந்தாமரை மாநாட்டில் பேசிய நரேந்திரமோடி, தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பாரதீய ஜனதா கட்சி இப்போதே தொடங்கி விட்டது. பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை தேர்வு செய்த பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு, கடந்த 13–ந்தேதி அவரை பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

நரேந்திர மோடி திருச்சி வருகை , போலீசார் தீவிர சோதனை narendra modi tiruchi visit tanjore police checking

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருச்சியில் இன்று நடைபெற இருக்கும் இளந்தாமரை மாநாட்டிற்கு வருகை தர உள்ளார். இதற்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தமிழக உளவுத்துறை போலீசாரும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக உள்ளனர். நரேந்திர மோடி திருச்சி வருகையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சையில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். திருச்சிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே போல், தஞ்சையில் இருந்து கரூர், திருப்பூர், கோயமுத்தூர் செல்லும் பஸ்கள் அரியலூர் வழியாக செல்ல வேண்டும்.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் திருச்சிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மோடி திருச்சி வருகையை முன்னிட்டு தஞ்சையில் அதிரடி சோதனை நடைபெற்றது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை டவுன் பகுதியில் நேற்று இரவு 12 மணி முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மேற்கு, கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ராசேந்திரன் தலைமையிலும், தெற்கு, மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் போலீசார் தஞ்சை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோடியம்மன்கோவில், மேரீஸ்கார்னர், ராமநாதன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப், ஆற்றுப் பாலம், மேலவஸ்தாச்சாவடி, டான்டெக்ஸ் ரவுண்டானா, கீழவாசல் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தனியார் மற்றும் அரசு தங்கும் விடுதிகளில் சந்தேகம் படும்படி யாரும் தங்கி இருக்கிறார்களா என்று தீவிர சோதனையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதியில் சந்தேகம் படும்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் தங்கி இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரேந்திரமோடி வருகை Modi visit Police circle around Tiruchy

திருச்சியில் பாரதீய ஜனதா இளைஞர் அணி மாநாடு நடபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஒரு ஏ.டி.ஜி.பி. தலைமையில் 12 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மாநாட்டு மேடை முற்ற்லும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் செல்போன்களை செயல் இழக்க வைக்கும் ஜாபர் பொருத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ரஜினி? Rajini with Narendra Modi

திருச்சியில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ரஜினி?

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று மாலை திருச்சியில் நடைபெறும் 'இளந்தாமரை' மாநாட்டில் உரையாற்றுகிறார். இம்மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Narendra Modi, Rajinikanth to unite in Trichy, Tamil Nadu?

Narendra Modi, Rajinikanth to unite in Trichy, Tamil Nadu?

Bharatiya Janata Party (BJP) prime ministerial candidate Narendra Modi is expected to visit Tamil Nadu on Thursday, Sept 26. The Gujarat CM is scheduled to attend a huge BJP youth conference in Trichy. While the South Indian state is waiting for the much-expected visit of the popular leader, the party reportedly is waiting for the arrival of Rajinikanth. BJP reportedly sent Rajinikath an invitation to participate in the mega rally organised for Modi in Trichy. The South Indian superstar is expected to meet the BJP leader. However, the actor and his close associates did not divulge any information regarding his plan to meet Modi. BJP hoisted posters featuring Modi and Rajinikanth in Trichy. Media reports speculated that the party has been trying to woo the superstar to gain more votes during upcoming Lok Sabha election which is expected to be held in 2014. BJP, which could not form government alone in any South Indian states, except Karnataka, has been trying to woo the voters in the region. Hence, it was reported that Modi might meet Rajinikanth and the popularity of the superstar might help BJP to win election. Earlier it was reported that Rajinikanth may join politics soon. BJP President in Tamil Nadu -- Pon Radhakrishnan appealed to Rajnikanth to support the party in the upcoming Lok Sabha election which is expected to be held in 2014. Radhakrishnan, while speaking to media persons, said, "He is the most responsible and respected person in the state and he has concerns for the nation in general and the state in particular." The state party president also added, "I issue an open appeal to the actor to take a good decision and voice in favour of the party." However, Rajinikanth himself has not confirmed the news on joining politics.

திருச்சி இளந்தாமரை மாநாடு Trichy conference BJP volunteers participate

திருச்சியில் இன்று மாலை பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு நடக்கிறது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து இணைதளம் மற்றும் நேரடி முன்பதிவுகள் முலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தனர்.

Political situation is favourable: Modi

Gujarat Chief Minister Narendra Modi, who is on a two-day visit to Kerala, left for Kollam on Thursday morning to participate in the 60th birthday celebrations of Mata Amritanandamayi.
Earlier, he visited The Padmanabha Swamy temple in Thiruvananthapuram where he jotted down a message in Gujarati after paying obeisance to the deity at the temple. He also called on the Travancore Royal family at the Kaudiar Palace.
Mr. Modi, who is the prime ministerial candidate of BJP, addressed a meeting of the office-bearers

மோடி வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படும் Modi arrival tamil political changes

மோடி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Modi arrival tamil political changes Pon.Radhakrishnan interview

திருச்சியில் இன்று நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பாரதீய ஜனதா தொண்டர்கள் திருச்சிக்கு வந்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் திருச்சி ஜி.கார்னர் பகுதியில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 150 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட மேடையின் அருகில் 2 சிறிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Wednesday, September 25, 2013

திருச்சியில் இன்று நரேந்திர மோடி பேசுகிறார் Trichy today BJP conference Narendra modi speech

திருச்சியில் இன்று  நரேந்திர மோடி பேசுகிறார் Trichy today BJP conference Narendra modi speech

பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ளது.
2014–ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வலுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவு செய்து பணியை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வரான நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.

திருச்சியில் இளந்தாமரை மாநாடு ilanthamarai Conference happening today

திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது: ராஜ்நாத்சிங் நரேந்திரமோடி பங்கேற்பு ilanthamarai Conference happening today 

திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றனர்.

நரேந்திர மோடி வருகை Narendra modi visit Trichy tody colleges holiday

நரேந்திர மோடி வருகையையொட்டி திருச்சியில் இன்று பல்வேறு கல்லூரிகளுக்கு விடுமுறை Narendra modi visit Trichy tody colleges holiday 

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் பாரதீய ஜனதா இளந்தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு இன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிய தொடங்கினர்.

இதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் திருச்சி சுற்றுப்பகுதியில் உள்ள 7 சோதனை சாவடிகளில் பரிசோதனைக்கு பிறகே திருச்சி மாநகருக்குள் அனுமதிக்கிறார்கள்.
திருச்சியில் இன்று பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் பலர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து காத்திருந்தனர். 5–க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

Popular Posts