Friday, October 4, 2013

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

Tamil NewsYesterday,

அகமதாபாத், அக்.4-

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 'டுவிட்டர்' வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார்.

5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு கொண்டாட்டம் ஆகும். இந்த தேர்தல் ஆரோக்கியமானதாகவும். ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்போம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த மாநிலங்களில் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:–

5 மாநில சட்டசபை தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற போதிலும், நரேந்திர மோடியின் செல்வாக்கு பாரதீய ஜனதாவின் வெற்றிவாய்ப்புக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் அந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ராஜஸ்தான், டெல்லியில் ஊழல் மலிந்து விட்டதால், அந்த மாநிலங்களில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றும். மிசோரம் மாநிலத்திலும் பாரதீய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் தற்போது பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுகிறது.

இவ்வாறு சுதான்சு திரிவேதி கூறினார்.
...
Show commentsOpen link

Thursday, October 3, 2013

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார் narendramodi 18 on visit in chennai

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார்: மியூசிக் அகடாமியில் பேசுகிறார் narendramodi 18 on visit in chennai

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந்தேதி திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திரண்ட கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். வருகிற 18–ந்தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகடாமியில் நடைபெறும் நானி பல்கிவாலா ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி, எழுத்தாளர் சோ ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
விழாவில் அருண்ஷோரி எழுதிய புத்தகத்தையும் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இந்த தகவலை பல்கிவாலா பவுண்டேசன் டிரஸ்டி ராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அதே போல் மோடி சென்னை வருகையின் போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசலாம் என்று டெல்லி பா.ஜனதா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பில், இப்போதைய சூழ்நிலையில் மோடி– ஜெயலலிதா சந்திப்புக்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு வேளை சந்தித்தாலும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்றனர்.

 

Wednesday, October 2, 2013

முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம்: இளைஞர்கள் விழாவில் மோடி பேச்சு Modi wants to build toilets first temples later

முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம்: இளைஞர்கள் விழாவில் மோடி பேச்சு Modi wants to build toilets first temples later
Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.2-

முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம் என குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இளைஞர் விழாவில் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்துத்துவா தலைவர் என்ற வகையில் நான் அறியப்படுகிறேன். இந்த நிலையில் மக்கள் மனதில் படிந்துள்ள என்னுடைய இமேஜ் இதை கூற அனுமதிக்காவிட்டாலும் எனது உண்மையான எண்ணத்தை துணிச்சலுடன் கூற வேண்டும் என்றால் முதலில் கழிவறைகளை கட்டுவோம்; பிறகு கோயில்களை கட்டுவோம் என்றுதான் கூறுவேன்.

நம் நாட்டில் உள்ள கிராமங்களில் இருக்கும் கோயில்களுக்கு கூட லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் கழிவறைகள் இல்லை. சரியான கழிவறை வசதிகள் இல்லாததால் பெண்கள் திறந்த வெளிகளை கழிப்பிடமாக ஆக்கிக்கொள்ளும் அவலம் இன்றும் நம் நாட்டில் நீடித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
...
Show commentsOpen link

Tuesday, October 1, 2013

மோடி அலையை எதிர்கொள்ள குஜராத்தில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் Rahul Gandhi on 2 days Gujarat visit

மோடி அலையை எதிர்கொள்ள குஜராத்தில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் Rahul Gandhi on 2 days Gujarat visit
Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.2-

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வரும் நிலையில் காங்கிஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்திப்பது போல் குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார்.

குஜராத் மாநிலத்தில் ஊழல் பெருகி விட்டதாக கூறி வரும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தலைநகர் அகமதாபாத்தில் ஊழலுக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற சுமார் 200 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை (3ம் தேதி) குஜராத் செல்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு அமைப்பான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் நாளை அவர் உரையாற்றுகிறார்.

பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி 4ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
...
Show commentsOpen link

Monday, September 30, 2013

மோடி ஒரு சிறந்த நிர்வாகி, ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம் Jagan Mohan Reddy praise for Narendra Modi

மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும்: ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம் Jagan Mohan Reddy praise for Narendra Modi

Tamil NewsYesterday,

ஐதராபாத், செப். 30-

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு ஐதராபாத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் கவர்னர் ஈ.எஸ்.எல். நரசிம்மாவை சந்தித்து ஆந்திராவை இரண்டாக பிரிப்பது குறித்து சட்டசபையின் பிரத்தியேக கூட்டத்தை கூட்டி கருத்தை அறிய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி மோடி குறித்து கூறியதாவது:-

சிறந்த ஒரு நிர்வாகியான மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். மோடி மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மதம் அரசியலாக்கப்பட வேண்டியதில்லை.
ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் முடிவை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தினர், மோடியுடன் கூட்டு இல்லை என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

Sunday, September 29, 2013

மோடி வெற்றிபெற்று பிரதமராவது 100 சதவிகிதம் உறுதி Ramdev predicts win for Modi in 2014 polls

மோடி வெற்றிபெற்று பிரதமராவது 100 சதவிகிதம் உறுதி: சிகாகோ செய்தியாளர்களிடத்தில் ராம்தேவ் பேட்டி Ramdev predicts win for Modi in 2014 polls
Tamil NewsToday,

சிகாகோ, செப். 29-

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக யோகா குரு பாபா ராம் தேவ் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகாகோ, நியூஜெர்சி மற்றும் ஹவுஸ்டன் நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நேற்று சிகாகோ-இல்லியானஸ் நகரில் நடந்த விவேகானந்தர் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு ராம்தேவ் பேசினார்.  

பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் மோடி குறித்து கூறியதாவது:-

நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராவர் என்பது 100 சதவிதம் உறுதி. நாடு ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் 100 சீட்டுகளை மட்டும் பெறும். பாரதிய ஜனதா கூட்டணி 250-300 சீட்டுகளை பெறும். வரும் 2014-ம் ஆண்டுமுதல் இந்திய அரசியலில் புதிய வரலாறு படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதை நினைவு கூர்ந்தார்.

முன்பு பாபா ராம்தேவ் லண்டன் சென்றபோது அங்கு ஹூத்துரு விமானநிலையத்தில் சோதனை என்ற பெயரில் 8 மணி நேரம் வரை காக்க வைக்கப்பட்டார். இதுகுறித்து எந்த விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை. இது காங்கிரஸ் தலைமையிலான அரசின் சதித்திட்டம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

Popular Posts