Thursday, October 3, 2013

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார் narendramodi 18 on visit in chennai

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார்: மியூசிக் அகடாமியில் பேசுகிறார் narendramodi 18 on visit in chennai

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந்தேதி திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திரண்ட கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். வருகிற 18–ந்தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகடாமியில் நடைபெறும் நானி பல்கிவாலா ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி, எழுத்தாளர் சோ ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
விழாவில் அருண்ஷோரி எழுதிய புத்தகத்தையும் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இந்த தகவலை பல்கிவாலா பவுண்டேசன் டிரஸ்டி ராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அதே போல் மோடி சென்னை வருகையின் போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசலாம் என்று டெல்லி பா.ஜனதா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பில், இப்போதைய சூழ்நிலையில் மோடி– ஜெயலலிதா சந்திப்புக்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு வேளை சந்தித்தாலும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்றனர்.

 

No comments:

Post a Comment

Popular Posts