Friday, October 18, 2013

India is not just Delhi: Modi

India is not just Delhi: Modi

The country's foreign policy has to be driven by people, not by politicians sitting in New Delhi, Gujarat Chief Minister and the Bharatiya Janata Party's prime ministerial candidate, Narendra Modi, said on Friday.

Asserting that "India is not just New Delhi," Mr. Modi wondered why bilateral or international conferences and summits should not be held in States. Giving a hypothetical example, he said that if and when the Prime Minister of Britain visited India next, all his official meetings need not be held in New Delhi. Instead, Chennai should be allowed to host the visit.

This would provide to the bureaucracy of Tamil Nadu much-needed exposure and there would be capacity building in the State.

Delivering the Nani Palkhivala memorial lecture at a function organised here by the Palkhivala Foundation, Mr Modi said cultural and economic advantages of States had to be leveraged in building the country's position among the comity of nations.

Pointing out that his State had entered into partnership with Japan and Canada, he mooted a new role for States in external affairs and suggested that each State be allowed to have partnership with one country.

His lecture created high expectations, but the event turned out to be a modest affair.

The University Centenary Auditorium, which was the venue of the lecture, had several empty seats, possibly because many invitees could not make it to the venue, thinking that they had to go through tight security arrangements.

...

shared via

ப.சிதம்பரத்தை தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை: மோடி தாக்கு Narendra Modi asks why did Tamils send Chidambaram to Delhi

ப.சிதம்பரத்தை தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை: மோடி தாக்கு Narendra Modi asks why did Tamils send Chidambaram to Delhi

சென்னை, அக். 18-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். இன்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வாஜ்பாயின் தூதரக கொள்கைகளுக்கு மீண்டும் உயிர்தர வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவரது கட்சிக்குள்ளேயே மதிப்பு இல்லை என்றும் மோடி பேசினார்.

...

shared via

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

சென்னை, அக். 19-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நரேந்திர மோடி பேசியதாவது:-

மத்திய அரசு முடங்கி கிடப்பதால் ராணுவத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது.

உணர்வு பூர்வமாக அனுக வேண்டிய விஷயங்களில் உணர்வற்றவர்களாகவும் பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் பலவீனமானவர்களாகவும் நாம் இருந்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் தைரியத்துடன் முதல் அணு குண்டு சோதனையை நடத்தினார்.

இதற்காக சில நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடைவிதித்தபோது அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த 2 நாட்களில் இரண்டாவது அணு குண்டு சோதனையையும் நடத்தினார்.

ஒரு நாடு தங்களின் குடிமக்களை பாதுகாப்பதுடன் இதர நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.  அவர்கள் வேறு நிறத்தில் உள்ள பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். ஆனால் நமது ரத்தத்தின் நிறம் ஒன்றுதான்.

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

அலகாபாத், அக். 17-

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தலித் விவசாயிகள் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

மோடியின் பொதுக்கூட்டத்திற்காக தங்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தால் பயிர்கள் அனைத்தும் அழிந்துபோகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன், தங்களின் சம்மதத்தை மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

விவசாயிகள் தாக்கல் செய்த அந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் கான்பூர் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

...

shared via

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

சென்னை, அக். 18-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை இருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு ஒரு மகத்தான வெற்றி. அதற்கான பெருமை அனைத்தும் தமிழக மக்கள் மற்றும் பா.ஜனதா செயல்வீரர்களுக்கு சேரும்.

'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்பது இந்த மக்களுடைய கனவாக இருக்கிறது. அந்த கனவை நனவாக்கும் மனநிலையை உங்கள் மத்தியில் நான் காண்கிறேன். சென்ற வாரம் ஆந்திரா ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சூறாவளி வந்தது. அப்போது சூறாவளியானது இந்த பகுதிகளை நாசமாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போன்ற பேரழிவு ஏற்படாமல், நாடு முழுவதும் அமைதியான நிம்மதியான சூழ்நிலை உணரப்பட்டது.

மாற்றத்திற்கான பேரலை நம் நாட்டில் எழுந்து நிற்கிறது. அது இந்த சூறாவளியை தடுத்து நிறுத்துவிட்டது. இன்றைக்கு உலகமே நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நேரத்தில் யாரோ சொன்ன தகவலுக்காக புதையல் தோண்ட தயாராகியிருக்கிறது மத்திய அரசு. இந்த நாட்டில் இருந்து திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சூறையாடிய பணம் சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் உள்ளது. அந்த பணம், ஓராயிரம் டன் தங்கத்தின் மதிப்பைவிட அதிகம். அந்த பணத்தை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள். மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே பா.ஜனதாவின் கடமை. மீண்டும் ஒருமுறை டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஏற்பட்டால், தமிழக மக்களின் கனவை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

சென்னை, அக். 18–

தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை பல்கலைக் கழகத்தில் பல்கிவாலா அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நரேந்திரமோடி காரணமாக இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் படிக்கும பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்து மதவாதியான நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் அது மத கலவரத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஜூலை மாதம் இஸ்லாமிய கல்வி மையம் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்டதற்கு சென்னை பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. எனவே மதவாதி நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

''நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

...

shared via

Wednesday, October 16, 2013

நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது Narendra modi UP Bihar Congress losing influence

நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது      Narendra modi UP Bihar Congress losing influence

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு narendra modi tomorrow visit chennai Security

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு      narendra modi tomorrow visit chennai Security

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நாளை நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் நாளை (வெள்ளி) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மோடியை வரவேற்க வருகிறார்கள்.குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜூலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், சரவண பெருமாள், கருப்பு முருகானந்தம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து மோடியை வரவேற்கிறார்கள்.அதை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசுகிறார். இதற்காக விமானநிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்படுகிறது.விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.இதில் கலந்து கொள்வதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட 130 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வகுக்க வேண்டிய வியூகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.அதன்பிறகு மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை கழக மண்டபத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோசி எழுதிய நூலையும் நரேந்திரமோடி வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோவும் கலந்து கொண்டு பேசுகிறார்.விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.நரேந்திரமோடி சென்னை வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

Tamil NewsToday,

அகமதாபாத், அக். 16-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்தபோது அதனை கடுமையாக விமர்சித்தவர் அத்வானி. கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

அதன்பின்னர் கடந்த மாதம் போபாலில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மோடியும், அத்வானியும் பங்கேற்றனர். அப்போது அத்வானியின் காலைத் தொட்டு வணங்கனார் மோடி. ஆனால், அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

"மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்று அத்வானி பேசினார்.

காந்தி நகர் தொகுதி எம்.பி.யான அத்வானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவேற்புக்குப் பின்னர், மோடியும் அத்வானியும் ஒரே காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
...
Show commentsOpen link

Monday, October 14, 2013

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

கன்னியாகுமரி, அக். 15–

கன்னியாகுமரியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பின்னர் பாரதீய ஜனதா வளர்ச்சி அதிகரித்து உள்ளது. அவர் மீண்டும் வருகிற 18–ந் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியுடன் பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். வலுவான, வலிமையான பிரதமர் அமையக் கூடிய வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தால்தான் மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

புத்தூரில் பயங்கரவாதிகள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாரதீய ஜனதா முழுமையான மனதுடன் பாராட்டுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையினை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராட்டாதது துரதிஷ்டவசமானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் ஒருபடி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இருபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் புத்தூர் சம்பவத்தில் மட்டுமின்றி பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள், உளவுதுறை அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எண்ணிக்கை வெறும் கடுகளவு தான். இன்னும் நிறைய பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களே சொல்லி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

...

shared via

Modi talks of national ambition in global address

The U.S. government may have denied a visa to him, but Gujarat Chief Minister and BJP's Prime Ministerial candidate Narendra Modi continues to address global audiences.

On Monday, Mr. Modi addressed the Global Meet of Emerging Markets Forum in Washington through video conferencing, delivering his refrain on "Effective Governance: Getting results in a democracy."

Gujarat success

It may have been a global meet, but the Chief Minister spoke largely on his national ambition through the prism of his own avowed success story of Gujarat, promising that he could do to the country what he did to his home State.

"Those in the government have to understand that people's good is the biggest agenda. Governments are guardians of people's interests," Mr. Modi said.

"Humility is important and governments must accept the collective wisdom of the people. People are ready to listen for development."

'Bitter pills swallowed for greater good'

He added: "People are ready for bitter pills. The only assurance they want is what is being done is for a greater good."

Mr. Modi said that when he took over as Chief Minister, the energy sector was in a bad shape but he called in farmers and told them they needed was more water, and not electricity.

"I appealed to them for water conservation through micro irrigation. The government and the people worked together and we did plenty of work in water harvesting," he said, adding that groundwater tables had risen in the State while expenses of farmers had come down.

The Chief Minister said Gujarat had never been an agricultural State but with the slogan of 'per drop more crop', the average annual agricultural growth rate in the State had gone up to 10 per cent.

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

கான்பூர், அக். 14-

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-

இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னை, அக். 14–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.

...

shared via

Popular Posts