Friday, October 18, 2013

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

சென்னை, அக். 18-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை இருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு ஒரு மகத்தான வெற்றி. அதற்கான பெருமை அனைத்தும் தமிழக மக்கள் மற்றும் பா.ஜனதா செயல்வீரர்களுக்கு சேரும்.

'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்பது இந்த மக்களுடைய கனவாக இருக்கிறது. அந்த கனவை நனவாக்கும் மனநிலையை உங்கள் மத்தியில் நான் காண்கிறேன். சென்ற வாரம் ஆந்திரா ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சூறாவளி வந்தது. அப்போது சூறாவளியானது இந்த பகுதிகளை நாசமாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போன்ற பேரழிவு ஏற்படாமல், நாடு முழுவதும் அமைதியான நிம்மதியான சூழ்நிலை உணரப்பட்டது.

மாற்றத்திற்கான பேரலை நம் நாட்டில் எழுந்து நிற்கிறது. அது இந்த சூறாவளியை தடுத்து நிறுத்துவிட்டது. இன்றைக்கு உலகமே நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நேரத்தில் யாரோ சொன்ன தகவலுக்காக புதையல் தோண்ட தயாராகியிருக்கிறது மத்திய அரசு. இந்த நாட்டில் இருந்து திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சூறையாடிய பணம் சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் உள்ளது. அந்த பணம், ஓராயிரம் டன் தங்கத்தின் மதிப்பைவிட அதிகம். அந்த பணத்தை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள். மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே பா.ஜனதாவின் கடமை. மீண்டும் ஒருமுறை டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஏற்பட்டால், தமிழக மக்களின் கனவை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts