Friday, October 18, 2013

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

சென்னை, அக். 18–

தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை பல்கலைக் கழகத்தில் பல்கிவாலா அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நரேந்திரமோடி காரணமாக இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் படிக்கும பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்து மதவாதியான நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் அது மத கலவரத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஜூலை மாதம் இஸ்லாமிய கல்வி மையம் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்டதற்கு சென்னை பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. எனவே மதவாதி நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

''நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts