Monday, October 14, 2013

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

கன்னியாகுமரி, அக். 15–

கன்னியாகுமரியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பின்னர் பாரதீய ஜனதா வளர்ச்சி அதிகரித்து உள்ளது. அவர் மீண்டும் வருகிற 18–ந் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியுடன் பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். வலுவான, வலிமையான பிரதமர் அமையக் கூடிய வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தால்தான் மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

புத்தூரில் பயங்கரவாதிகள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாரதீய ஜனதா முழுமையான மனதுடன் பாராட்டுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையினை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராட்டாதது துரதிஷ்டவசமானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் ஒருபடி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இருபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் புத்தூர் சம்பவத்தில் மட்டுமின்றி பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள், உளவுதுறை அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எண்ணிக்கை வெறும் கடுகளவு தான். இன்னும் நிறைய பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களே சொல்லி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts