Friday, October 18, 2013

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

சென்னை, அக். 19-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நரேந்திர மோடி பேசியதாவது:-

மத்திய அரசு முடங்கி கிடப்பதால் ராணுவத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது.

உணர்வு பூர்வமாக அனுக வேண்டிய விஷயங்களில் உணர்வற்றவர்களாகவும் பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் பலவீனமானவர்களாகவும் நாம் இருந்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் தைரியத்துடன் முதல் அணு குண்டு சோதனையை நடத்தினார்.

இதற்காக சில நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடைவிதித்தபோது அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த 2 நாட்களில் இரண்டாவது அணு குண்டு சோதனையையும் நடத்தினார்.

ஒரு நாடு தங்களின் குடிமக்களை பாதுகாப்பதுடன் இதர நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.  அவர்கள் வேறு நிறத்தில் உள்ள பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். ஆனால் நமது ரத்தத்தின் நிறம் ஒன்றுதான்.

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts