Wednesday, October 16, 2013

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு narendra modi tomorrow visit chennai Security

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு      narendra modi tomorrow visit chennai Security

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நாளை நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் நாளை (வெள்ளி) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மோடியை வரவேற்க வருகிறார்கள்.குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜூலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், சரவண பெருமாள், கருப்பு முருகானந்தம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து மோடியை வரவேற்கிறார்கள்.அதை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசுகிறார். இதற்காக விமானநிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்படுகிறது.விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.இதில் கலந்து கொள்வதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட 130 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வகுக்க வேண்டிய வியூகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.அதன்பிறகு மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை கழக மண்டபத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோசி எழுதிய நூலையும் நரேந்திரமோடி வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோவும் கலந்து கொண்டு பேசுகிறார்.விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.நரேந்திரமோடி சென்னை வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Popular Posts