Thursday, September 26, 2013

நரேந்திரமோடி வருகை Modi visit Police circle around Tiruchy

திருச்சியில் பாரதீய ஜனதா இளைஞர் அணி மாநாடு நடபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஒரு ஏ.டி.ஜி.பி. தலைமையில் 12 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மாநாட்டு மேடை முற்ற்லும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் செல்போன்களை செயல் இழக்க வைக்கும் ஜாபர் பொருத்தப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் ஆண்கள், பெண்கள் அமர தனித்தனி காலரிகள், முக்கிய பிரமுகர்கள் அமர தனி காலரிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு காலரி நுழைவு வாயிலிலும் மெட்டல் டிக்டெர் சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நுழைவு வாயிலும் போலீசாரால் தேடப்படும் தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்பட 4 தீவிரவாதிகள் போட்டோக்களை மாட்டி வைத்துள்ளனர்.
பொதுமக்கள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி விடாதபடி தீவிரவாதிகள் படங்களின் மூலம் அடையாளம் காட்டப்படுகிறது. மாநாட்டு திடல் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
திருச்சி மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. மாநகரம் முற்றிலும் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
பகல் 12 மணிக்கே சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டு வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். 1 மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தொண்டர்கள் வந்த வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டன. வாகனங்களை நிறுத்த 7 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 32 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த முடியும்.

No comments:

Post a Comment

Popular Posts