Wednesday, October 9, 2013

மோடி 18 ந்தேதி சென்னை வருகை Modi 18th visit chennai BJP administer meet

மோடி 18 ந்தேதி சென்னை வருகை: பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்கிறார் Modi 18th visit chennai BJP administer meet


பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அவரது பேச்சை கேட்க திருச்சியில் திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பெருமளவு திரண்டு வந்தது அரசியல்வாதிகளை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு பா.ஜனதாவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது எழுந்துள்ள மோடி அலை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வருகிற 18-ந்தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கி வாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி எழுதிய நூலையும் அவர் வெளியிடுகிறார். விழாவில் எழுத்தாளர் சோ உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் நிகழ்ச்சிக்காக மோடி வந்தாலும் அவரது வருகையை கட்சியின் எழுச்சிக்கு பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் மோடியை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி வடமாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் திரட்டுகிறார்கள். சிறிது நேரம் அவர்கள் மத்தியில் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் முன்னணி கட்சிகளும், பா.ஜனதாவின் திடீர் வளர்ச்சியால் கூட்டணி பற்றி முடிவெடுப்பதில் தடுமாறுகின்றன.

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கும்படி வெளிப்படையாகவே பா.ஜனதாவுக்கு தி.மு.க. தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து தமிழக நிர்வாகிகளுடன் மோடி பேச வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோடியும் தனது பயண திட்டத்தில் மாறுதல் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது பா.ஜனதா வகுக்க வேண்டிய கூட்டணி வியூகம் பற்றி ஆலோசனை நடத்துகிறார். கூட்டணி விஷயத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்தையும் அவர் கேட்டறிகிறார்.

No comments:

Post a Comment

Popular Posts