Saturday, November 2, 2013

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

அகமதாபாத், நவ. 2-

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Friday, November 1, 2013

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

புதுடெல்லி, நவ. 1–

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.

டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

...

shared via

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

புதுடெல்லி, நவ. 1–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.

...

shared via

Wednesday, October 30, 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

பாட்னா, அக்.31-

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Popular Posts