Saturday, October 26, 2013

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

உதய்பூர், அக். 26-

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

ஜெய்பூர், அக். 27-

பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.

முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.

ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.

கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.

அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.

தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர்  மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஜான்சி, அக். 26–

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–

ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.

காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.

அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.

இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

முசாபர் நகர் முஸ்லிம் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.

ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.

பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.

கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.

பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.

காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?

உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.

காங்கிரஸ் அதை செய்யாமல் பேக்கேஜ் என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் பேக்கிங் செய்யும் காலம் வந்து விட்டது.

இவ்வாறு மோடி பேசினார்.

...

shared via

Friday, October 25, 2013

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

லக்னோ, அக். 26-

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை  பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

Popular Posts