Monday, October 14, 2013

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

கான்பூர், அக். 14-

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-

இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னை, அக். 14–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.

...

shared via

Wednesday, October 9, 2013

மோடி 18 ந்தேதி சென்னை வருகை Modi 18th visit chennai BJP administer meet

மோடி 18 ந்தேதி சென்னை வருகை: பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்கிறார் Modi 18th visit chennai BJP administer meet


பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அவரது பேச்சை கேட்க திருச்சியில் திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பெருமளவு திரண்டு வந்தது அரசியல்வாதிகளை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு பா.ஜனதாவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது எழுந்துள்ள மோடி அலை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வருகிற 18-ந்தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கி வாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி எழுதிய நூலையும் அவர் வெளியிடுகிறார். விழாவில் எழுத்தாளர் சோ உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் நிகழ்ச்சிக்காக மோடி வந்தாலும் அவரது வருகையை கட்சியின் எழுச்சிக்கு பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் மோடியை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி வடமாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் திரட்டுகிறார்கள். சிறிது நேரம் அவர்கள் மத்தியில் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் முன்னணி கட்சிகளும், பா.ஜனதாவின் திடீர் வளர்ச்சியால் கூட்டணி பற்றி முடிவெடுப்பதில் தடுமாறுகின்றன.

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கும்படி வெளிப்படையாகவே பா.ஜனதாவுக்கு தி.மு.க. தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து தமிழக நிர்வாகிகளுடன் மோடி பேச வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோடியும் தனது பயண திட்டத்தில் மாறுதல் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது பா.ஜனதா வகுக்க வேண்டிய கூட்டணி வியூகம் பற்றி ஆலோசனை நடத்துகிறார். கூட்டணி விஷயத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்தையும் அவர் கேட்டறிகிறார்.

Monday, October 7, 2013

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

Tamil NewsYesterday,

விஜயவாடா, அக். 7-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல், காங்கிரஸ் கட்சி அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார்.

குண்டூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனி தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஆனால் தெலுங்கானா விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தால், 13 மாவட்டங்கள் கொண்ட சீமாந்திரா பகுதியில் நிச்சயம் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும்.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பகுதி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார். இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை மோடி ஏற்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் தெலுங்கு மக்களை காங்கிரஸ் பிரிக்கிறது. எனவே, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

Popular Posts